Enable Javscript for better performance
புதுச்சேரி எழுத்தாளர்களுக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியைச் சேர்ந்த 3 எழுத்தாளர்கள் "ஹைக்கூ செம்மல்' விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    நீலநிலா மற்றும் கந்தகப்பூக்கள் அமைப்புகளின் சார்பில் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
    இந்த விழாவில் ஹைக்கூ கவிதை வளர்ச்சியில் சிறப்பாகப் பங்காற்றிய புதுச்சேரி எழுத்தாளர்களான  முனைவர் எ.மு. ராஜன், சீனு.தமிழ்மணி,  புதுவைத் தமிழ் நெஞ்சன் ஆகிய மூவருக்கும் "ஹைக்கூ செம்மல்' விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதை இவர்கள் மூவரும் நேரில் சென்று பெற்றுக்கொள்கிறார்கள். இத்தகவலை முனைவர் எ.மு.ராஜன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai