சுடச்சுட

    

    புதுவைக்கு அரிசி விநியோகம் செய்ய மத்திய அரசு ஒப்புதல்

    By DIN  |   Published on : 02nd October 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் உள்ள 11.5 லட்சம் ஏழை பயனாளிகள் பயன்பெறும் வகையில் 3 மாதங்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்படும் என மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மாநில முதல்வர் நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளார்.
    புதுதில்லியில் மத்திய அமைச்சர் பாஸ்வானை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுவை மாநிலத்துக்கு அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என அப்போது, அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் குடும்பங்களுக்கு சர்க்கரைக்கான மானியத்தை பரிமாற்றம் செய்யவும் வலியுறுத்தினார்.
    பொதுவிநியோகத் துறையின் கீழ் அரிசியை 11.5 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
    இதையடுத்து மூன்று மாதங்களுக்கு அரிசியை விநியோகம்
    செய்ய உணவு அமைச்சர் பாஸ்வான் ஒப்புதல் தெரிவித்தார். சர்க்கரை மானியத்தை பொறுத்தவரை ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.18.50 மானியம் தரப்படுகிறது. நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த மத்திய அரசுக்கு தயக்கம் எதுவுமில்லை எனவும் பாஸ்வான் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai