சுடச்சுட

  

  புதுச்சேரி பாண்கேர் சார்பில் அக். 3-ஆம் தேதி சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படும் எனத் அதன் செயலாளர் சே.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்.3ம் தேதி புதுவை முதியோர் பராமரிப்பு சங்கம் (பாண்கேர்) சார்பில் சர்வதேச முதியோர் தினத்தை கொண்டாட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  இதனை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி காலை 7 மணிக்கு முதியோர் பராமரிப்பு சங்கத்தில் இருந்து காந்தி சிலை வரை முதியோர் நடை பயணம் நடைபெறும். இதில் 450 உறுப்பினர்கள் கலந்து கொள்வர். பின்னர், பாரதி பூங்கா அருகில் உள்ள வாழ்வியல் முறை மாற்று மருத்துவ மையத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, பல் மருத்துவம், இலவச ரத்த அழுத்தம் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
   அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு முதியோர் தினவிழா ஆந்திர மகா சபையில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, முதியோர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 175 பேருக்கு பரிசுகளை வழங்குகிறார்.
  மேலும், 296 மூத்த குடிமக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்குகிறார். சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்குகிறார். சிவா எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, சமூக நலத்துறைச் செயலர் மிகிர்வரதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai