சுடச்சுட

  

  புதுவையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்: 150 கலைஞர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 02nd October 2017 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கார்னிவல் கொண்டாட்டங்கள் கடற்கரைச் சாலையில் புதன்கிழமை நடைபெற்றன. இதில் சுமார்  150 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
  உலக சுற்றுலா தினவிழா ஆண்டுதோறும் செப். 27ம் தேதி ஒரு கருத்தினை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. நிகழ் ஆண்டு கருத்து "நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான கருவி' என்பதாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற இந்த விழாவில், அரசுச் செயலர் பார்த்திபன் முரசு கொட்டி கலாசார அணி வகுப்பை தொடங்கி வைத்தார். கார்னிவெல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சுமார்  150 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
  இதில் நாதஸ்வரம், பேண்டு, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், பெரிய மேளம், பம்பை மேளம் ஆகியவற்றுடன் புதுச்சேரி பாரம்பரிய மஸ்க்கிரத் (முகமூடி) நடனம், பார்வையாளர்கள் குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்க நடமாடும் விலங்குகள் வடிவ பொம்மைகள் ஆகியவை இடம் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை இயக்குநர் முனிசாமி மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
  உலக சுற்றுலா தின நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருகிற 29-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை சீகல்ஸ் உணவகத்தில் உணவுத் திருவிழா நடக்கிறது.
  இதற்காக கடற்கரைச் சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் கட்டப்பட்டிருந்த பதாகை ஆங்கிலத்தில் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai