சுடச்சுட

    

    புதுவை பல்கலை. துணைவேந்தரை நீக்கக் கோரி ஊழியர்கள் தர்னா

    By DIN  |   Published on : 02nd October 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மத்திய பல்கலைக்கழக துணை வேந்தரை மத்திய அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
    பல்கலை. ஊழியர்களுக்கு எதிரான போக்குடன் செயல்படும் துணைவேந்தர் (பொ) அனிஷா பஷீர் கானை உடனே மத்திய அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் மாலை முழுவதும் தர்னா நடைபெற்றது.
     சங்கத் தலைவர் காசிராஜன், அமைப்பாளர் சூரத்சின்ஹா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் துணைவேந்தர் செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    இதுகுறித்து சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: பல்கலை. துணைவேந்தர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுபற்றி ஊழியர்கள் பேசினால் ஒருதலைபட்சமாக பணியிடை நீக்கம் செய்கிறார். ஏற்கெனவே 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 பேரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனை கைவிட வேண்டும். மேலும், துணைவேந்தர் தனக்கு ஆதரவானவர்களை பதிவாளராகவும், புலமுதன்மையர்களாகவும் நியமிக்கிறார். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினால், தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகிறார். தற்போது பதிவாளராக தரணிகரசு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் செல்லாது. ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் துணைவேந்தரை மத்திய அரசு நீக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai