சுடச்சுட

  

  மணக்குளவிநாயகர் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறைக்கு சிறப்பு விருது

  By DIN  |   Published on : 02nd October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறைக்கு அல்ட்ரா டெக் விருது இரண்டாவது ஆண்டாக கிடைத்துள்ளது.
  இந்தியன் கான்கிரீட் இன்ஸ்ட்டியூட், அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் சார்பில் கான்கிரீட் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. ஐசிஐ தலைவர் எம்.ஆர்.கல்கல், செயலர் ராதாகிருஷ்ணன், தலைவர் நாராயணபிள்ளை, பொருளாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
  தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறைக்கு அல்ட்ரா டெக் விருது தரப்பட்டுள்ளது. தொழில்முறை பயிற்சி, சிறந்த திட்டங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டடவியல் துறைத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் மறறும் மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி முதல்வர் கே.வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai