சுடச்சுட

  

  புதுச்சேரி, கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருந்தியல் கல்லூரி,  புதுவை அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில், உலக மருந்தியல் தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு கடற்கரையில் மருந்தியல் தொடர்பான விழிப்புணர்வு நாடகமும்,  நடன  நிகழ்ச் சியும் நடைபெற்றன.
  மருந்தியல் கல்லூரி முதல்வர் கோபால் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தனியார் மருந்து நிறுவன இயக்குநர் கருணாகரன், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மணவாளன், அரசு பொது மருத்துவமனை மருந்தாளுநர் அன்புசெல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
  இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக் கூடாது, மருந்துகளை உபயோகிக்கும் முறை, மருந்துகளை பாதுகாத்து வைக்கும் முறை குறித்து நாடகம், நடனங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அருள் ஆனந்தராஜ், நூருல் ஆலம், பிரகாஷ் யோகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai