சுடச்சுட

    

    புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மாயமானது குறித்து போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
     புதுச்சேரியை அடுத்த திருபுவனையில் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் வசந்தகுமார், ரவிசங்கர் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் திங்கள்கிழமை புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் பூங்கா, கடற்கரை ஆகியவற்றை சுற்றிப்பார்த்து விட்டு, தலைமைச் செயலகம் முன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் செயற்கை மணல் பரப்பு பகுதியில் கடலில் குளித்தனர்.
    அங்கு கடலில் குளிப்பதற்காக தடை விதிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரம் அமர்ந்திருந்த அவர்களது உறவினர் அவர்களை காணவில்லை என கூக்குரலிட்டபோதுதான் அங்கிருந்தோர் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை
     இதுகுறித்து தகவல் அறிந்த பெரியக்கடை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருபுவனையில் இருந்து மாயமான மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்  அங்கு வந்து கதறி அழுதனர். இதையடுத்து அங்குவந்த காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி காணாமல் போன மாணவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டார்.
    மாணவர்களை தேடும் பணியில் கடலோர காவல்
    படை, மீனவர்கள் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai