சுடச்சுட

  

  காந்தி வழியில் தேசத்தை காக்க உறுதியேற்க வேண்டும்: அனீஷா பஷீர்கான்

  By DIN  |   Published on : 03rd October 2017 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காந்தி வழியில் தேசத்தைக் காக்க மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர் கான் கேட்டுக் கொண்டார்.
  புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அனிஷா பஷீர் கான் பேசியதாவது:
  காந்தியின் வாழ்க்கை வரலாறும், அவர் பின்பற்றிய அகிம்சை கொள்கைகளும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறைகளாக மாறி வரும் சூழ்நிலையில்,  இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் அவர்தம் கொள்கைகளை வாழ்வின் அறநெறிகளாக பின்பற்றி தேசத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.
  பதிவாளர் தரணிக்கரசு, துணைப் பதிவாளர் முரளிதாசன், காவல்துறை கண்காணிப்பாளர் ரவிக்குமார் , பொதுமக்கள் தொடர்புத்துறை உதவிப் பதிவாளர் மகேஷ் , பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai