Enable Javscript for better performance
கோரிமேடு காவல் வளாகத்தில் சீரமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோரிமேடு காவல் வளாகத்தில் சீரமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

    By DIN  |   Published on : 03rd October 2017 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காவல்துறை உதய தினத்தை முன்னிட்டு கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் சீரமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை டிஜிபி சுனில்குமார் கெளதம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
    காவல்துறை சார்பில் 54-ஆம் ஆண்டு உதய தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சீரமைக்கப்பட்டது. அதை டிஜிபி கெளதம் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக காவலர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன், காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai