சுடச்சுட

    

    புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், சத்திய சோதனை நூல் இலவசமாக வழங்கும் விழா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
    வாசகர் வட்டத் தலைவர் கலைமாமணி சுந்தர லக்குமி நாராயணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவராஜ் வரவேற்றார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறான சத்திய சோதனை நூலை வட்டச் செயலாளர் பேராசிரியர் சம்பத்
    குமார் மாணவர்களுக்கு வழங்கினார்.  மேலும், வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
    பேராசிரியர்கள் பார்த்தசாரதி, வேதாகமம், வழக்குரைஞர்கள் பரிமளம், புருஷோத்தமன், டேவிட் லூர்துநாதன், மதுரைமுத்து, வாசகர் வட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், அமிர்தலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai