சுடச்சுட

  

  சர்வதேச கருத்தரங்கம்:  புதுவை பொறியியல் மாணவர்கள் சிறப்பிடம்

  By DIN  |   Published on : 03rd October 2017 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கில்  சிறப்பிடம் பெற்றனர்.
  இந்திய மின் மற்றும் மின்னணுவியல் தயாரிப்பாளர்கள் சங்கம் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்ரோமா என்ற சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.  அதன்படி, மும்பையில் அண்மையில் அக்கருத்தரங்கம் நடைபெற்றது. மின்னியல் சுழலும் இயந்திரம், இயக்கிக்கான புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  பல்வேறு நாடுகள் மற்றும்  இந்தியா முழுவதும் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம்  57 திட்ட சுருக்கங்கள் பெறப்பட்டன. இதில் பெல், ஏபிபி, என்பிசிஐஎல் போன்ற நிறுவனங்களிடம் இருந்து 21,  ஐஐடிக்கள், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் இருந்து 8, அயல்நாடுகளில் இருந்து 5 திட்ட அறிக்கைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.
  இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் கெளதம், சிவசுப்பிரமணியன், விமல்ராஜ், பிரவீன்,கோவர்த்தனன், துணை பேராசிரியர் அருண் ஆகியோரும், மாணவர்கள் ஜெகதீஷ், ஐயனார், ஆனந்த், அஜித்குமார், பி.ஆனந்தகீதன், துணைப் பேராசிரியர் திரியன் ஆகியோர் தயாரித்த 2 திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டன.  
  பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் கே.நாராயணசாமி, முதல்வர் கே.வெங்கடாசலபதி, துறைத் தலைவர் எஸ்.அன்பு
  மலர் ஆகியோர் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai