சுடச்சுட

  

  டெங்கு சிகிச்சை பெற தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் புதுவைக்கு வருகை: முதல்வர் தகவல்

  By DIN  |   Published on : 03rd October 2017 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற தமிழகத்தைச் சேர்ந்த அதிகம் பேர் புதுவைக்கு வருகின்றனர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
   புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
   அரசு மருத்துவமனையில்
  முதல்வர் ஆய்வு
   இந்நிலையில், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
  அப்போது டெங்கு நோயாளிகளுக்கான சிறப்பு  சிகிச்சை பிரிவுக்குச் சென்று பார்வையிட்ட முதல்வர், காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
   நோயாளிகள் பெயர், அவர்கள் எந்த ஊர், காய்ச்சல் பாதிப்பு எவ்வளவு நாள்களாக உள்ளது போன்றவை குறித்து கேட்டுக் கொண்டார்.
  பின்னர், செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:
   டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து செயல்படுகின்றன.
   ஏற்கெனவே, அமைச்சர் மல்லாடி தலைமையில் 2 முறை டெங்கு தடுப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி, புதுவை நகர்ப்புறம், கிராமப் புறங்களில் டெங்கு கொசுவை ஒழிக்க எண்ணெய் மருந்து கலந்த கொசு மருந்தை அடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
   குறிப்பாக, ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துக்கும் தலா ஒரு கொசு மருந்து புகைப்போக்கி இயந்திரம் அளிக்கப்பட உள்ளது.  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்த போது, அதில் 40  சதவீதத்துக்கு மேல் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை பகுதிகளைச்  சேர்ந்தவர்கள் வந்து இங்கு சேர்ந்துள்ளனர். மொத்தம் 150 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
  புதுவையில் டெங்கு கட்டுக்குள் தான் உள்ளது. அதை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
   மேலும், புதுவையில் 700 சதவீதம் டெங்கு பாதிப்பு அதிகமாகி விட்டதாக  செய்திகள் வந்துள்ளன. அதுபோன்ற தகவல்களை தெரிவித்தவர்களிடம் தான் ஊடகங்கள், எவ்வாறு இந்த அளவு பாதிப்பு என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
   அரசு பொது மருத்துவமனை,  இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், சிகிச்சை வசதிகள் உள்ளன என்றார் நாராயணசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai