தென்னிந்திய கோ-கோ போட்டி: புதுவை பல்கலை.அணி தேர்வு
By DIN | Published on : 03rd October 2017 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையே நடைபெறும் மகளிருக்கான கோ-கோ போட்டியில் பங்கேற்கும் புதுவை பல்கலை. அணி தேர்வு செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், மைசூர் பல்கலைக்கழகம் சார்பில் வரும்
4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையே மகளிர் கோ-கோ போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் புதுவை மத்திய பல்கலை. அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இணைப்பு கல்லூரிகளான சாரதா கல்லூரி, இந்திரா காந்தி கலைக் கல்லூரி, கஸ்தூரிபாய் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, புதுவை பல்கலைக்கழக மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அணியின் மேலாளராக முனைவர் தனலட்சுமி, பயிற்சியாளர் நந்தகோபால் நியமிக்கப்பட்டனர். புதன்கிழமை மைசூர் செல்லும் மகளிர் அணியை பல்கலை. விளையாட்டு உதவி இயக்குநர் கோ.சிவராமன், இந்திரா காந்தி கலைக் கல்லூரி விளையாட்டு இயக்குநர் சூரியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தினர்.