சுடச்சுட

  

  பாஜக பாதயாத்திரை: புதுவை நிர்வாகிகள் கேரளத்துக்கு பயணம்

  By DIN  |   Published on : 03rd October 2017 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரளத்தில் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதைக் கண்டித்து நடைபெறும் பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க புதுவை மாநில பாஜக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர்.
  கேரள மாநில பாஜக சார்பில் அதன் தலைவர் குமணன் ராஜசேகரன் தலைமையில் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை பாதயாத்திரை நடக்கிறது.  
  கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா யாத்திரையை தொடக்கி வைக்கிறார்.
  இதன் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக புதுவை மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் பொதுச் செயலர் தங்க.விக்ரமன், எம்.எல்.ஏக்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
  மேலும், கேரளத்தில் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து புதுவை மாநில பாஜக சார்பில் வரும் 6-ஆம் தேதி புதுவை அண்ணா சிலை அருகே காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இத்தகவலை பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai