Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் - நெட்டப்பாக்கம் கொம்யூன் குழு மாநாடு திங்கள்கிழமை பாகூரில் நடைபெற்றது.
    கொம்யூன்குழு உறுப்பினர்கள் முத்துலிங்கம், இளவரசி ஆகியோர் தலைமை வகித்தனர்.
     கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார்.  கொம்யூன் செயலாளர் த.தமிழ்ச்செல்வன் செயலறிக்கை வாசித்தார்.  வரவு, செலவு அறிக்கையை செல்வராஜ் தாக்கல் செய்தார். கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வாழ்த்திப் பேசினார். தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் நிறைவு செய்து பேசினார்.
    புதிய நிர்வாகிகள்: பாகூர்-நெட்டப்பாக்கம் கொயூன்குழு செயலாளராக த.தமிழ்ச்செல்வன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கொம்யூன் குழு உ றுப்பினர்களாக செல்வராசு, அரிதாஸ், இளவரசி, கலியன், ராமமூர்த்தி, முத்துலிங்கம், சண்முகம், கவுசிகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    தீர்மானங்கள்: கிராமப்புற மாணவர்கள் படிக்க ஏதுவாக பாகூர்- நெட்டப்பாக்கம் பகுதிகளில் கல்லூரிகள் தொடங்க வேண்டும். பாகூர் ஏரியை ஆழப்படுத்த வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாகூர் பகுதியில் மதுக் கடைகளை அகற்ற வேண்டும். கிராமப்புற உள்கட்டமைப்புப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai