சுடச்சுட

  

  அண்டை மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   உலக தொழிற்சங்க அமைப்பு தினமான செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நாடுவிட்டு நாடு தஞ்சம் புகுந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
   இந்த நிலையில், புதுச்சேரியில் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி பஞ்சாலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai