சுடச்சுட

  

  தனியார் பள்ளி ஊழியர் கூட்டமைப்பினர் தர்னா

  By    புதுச்சேரி,  |   Published on : 04th October 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் பள்ளி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
   மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் 2016 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
   ஆனால், புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களான பொதுத் துறை, தன்னாட்சி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.
   இதனைக் கண்டித்து 7-ஆவது ஊதியக்குழு அமுலாக்கத்திற்கான அரசு சார்பு நிறுவன மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
   அதன்படி, தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
   ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணநன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசி, சேகர், வேலையன், விஜயராகவன், ஆரோக்கியநாதன், செல்வலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai