சுடச்சுட

    

    பாசிக் ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி  |   Published on : 04th October 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு சார்பு நிறுவனமான பாசிக் ஊழியர்கள் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை மிஷன் விதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஊழியர்களுக்கு 39 மாத ஊதியம் வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களாக 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முந்தைய காலங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளமும் குறைக்கப்பட்டு 70 சதவீதம் மட்டுமே தரப்படுகிறது.
     இதை முழு ஊதியமாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 36-ஆவது நாளாக பல்வேறு போராட்டங்களை பாசிக் ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.
     ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கச் செயலாளர் கே.முத்துராமன் வரவேற்றார். மாநிலத் தலைவர் விஎஸ்.அபிஷேகம், பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, கெளரவத் தலைவர் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோர் பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai