Enable Javscript for better performance
பாண்லே பாலகம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாண்லே பாலகம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

    By  புதுச்சேரி,  |   Published on : 04th October 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கடற்கரை சாலையில் பாண்லே பாலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி கடற்கரை நேரு சிலை அருகே உள்ள இடத்தில் சிறு வியாபாரிகள் கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் தங்களுக்கு தேவைப்படும் பொருள்களை இவர்களிடமிருந்து வாங்கிச் செல்வர்.
     இந்த நிலையில், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என வியாபாரிகள் பலமுறை வலியுறுத்தி வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, பாரதி பூங்கா அருகே பாண்லே பாலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
     இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
     இதனிடையே செவ்வாய்க்கிழமை நேரு சிலை அருகே வியாபாரிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai