சுடச்சுட

  

  பேருந்து நிலையம் அருகே ரெளடி வெட்டிக் கொலை

  By  புதுச்சேரி  |   Published on : 04th October 2017 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
   புதுவை வாணரப்பேட்டை சின்னாத்தா கோயில் வீதியைச் சேர்ந்தவர் வேலு (எ) முனியன் (32). ரெளடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
   இவருக்கு திருமணமாகி ரித்திஷ் (5), ஒன்றரை வயதில் பிரதிஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மனைவி சங்கீதா குடும்பத் தகராறு காரணமாக 6 மாதங்களுக்கு முன்னர் இளைய மகன் பிரதிஷை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
   வேலு, தனது தாய் செந்தாமரை மற்றும் மூத்த மகன் ரித்திசுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு செந்தாமரை தனது மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுவிட்டார்.
   இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று ஆட்டுப்பட்டி சாராயக் கடையில் சாராயம் குடித்துள்ளார்.
   அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
   இதனையடுத்து வேலு சாராயக் கடையை விட்டு வெளியே வந்ததும், மர்ம கும்பல் அவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டியுள்ளது. வேலு கண்டாக்டர் தோட்டம் வழியாக ஓடியுள்ளார். அப்போது அவர்கள் வேலுவின் காலில் வெட்டினர். இதில் ரத்தம் வழிய வேலு தொடர்ந்து ஓடினார்.
   தாவரவியல் பூங்கா வாயில் பாலம் வழியாக அந்தோணியார் கோயில் அருகே அவர் ஓடியபோது விரட்டிச் சென்ற கும்பல் கழுத்தில் பலமாக வெட்டியதில் வேலு உயிரிழந்தார்.
   இதனால் வழிநெடுகிலும் ரத்தக் கறையாக காட்சியளித்தது. அதிகாலை 3 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் வேலு கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
   காவல் ஆய்வாளர் தனசெல்வம், உதவி ஆய்வாளர் நியூட்டன் மற்றும் போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai