சுடச்சுட

  

  முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி

  By  புதுச்சேரி,  |   Published on : 04th October 2017 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
   புதுச்சேரி முதியோர் பராமரிப்புச் சங்கம் (பாண்கேர்) சார்பில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை முதியோர் நடைப்பயணம் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கில் முதியோர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு பாரதி பூங்கா அருகே உள்ள மருத்துவ வளாகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆந்திர மகா சபாவில் முதியோர் தின விழா நடைபெற்றது.
   நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமை வகித்தார்.
   முதியோர் தின போட்டிகளில் வென்றவர்களுக்கும், 290 முதியோருக்கும் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
   முதியோர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவை மாநிலம் முன்னோடி மாநிலமாக உள்ளது. புதுச்சேரியில் புதிய முதியோர் இல்லங்களை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
   மத்திய அரசும் புதிய முதியோர் இல்லங்களை அமைக்க நிதி தர உள்ளது. கிராமப்புறங்களிலும் முதியோர் இல்லங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
   உதவித் தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். நிதிநிலைக்கு ஏற்ப புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு தேடி முதியோர் உதவித்தொகை வழங்குவதில் சில குழப்பங்கள் உள்ளன.
   அதனை சரிசெய்து மீண்டும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் நாராயணசாமி.
   இரா.சிவா எம்எல்ஏ, பாண்கேர் தலைவர் மிகிர்வரதன், செயலாளர் ஸ்ரீதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai