சுடச்சுட

  

  புதுச்சேரி மூலகுளம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (அக்.5) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கவுண்டன் பாளையத்தின் ஒரு பகுதி, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்பிஐ காலனி, மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், சாஸ்திரி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
   வில்லியனூர் - காலாப்பட்டு மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, நவோதயா வித்யாலயா பள்ளி, புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி, ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், சட்டக் கல்லூரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
   மரப்பாலம்: புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்தப் பாதையில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மறைமலையடிகள் சாலை, புதிய பேருந்து நிலையம், சுப்பையா நகர், முதலியார்பேட்டை முழுவதும், ஜேவிஎஸ் நகர், கடலூர் சாலை (பகுதி), புவன்கரே வீதி, ஏஎஃப்டி மில், பாரதி மில், பெரியார் நகர், முல்லை நகர், காராமணிக்குப்பம், சவானபேட்டை, உருளையன்பேட்டை, வினோபா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai