Enable Javscript for better performance
ஒடிசா பெண்ணிடம் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் ஒடிசா பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     ஒடிசா மாநிலம் ஜெய்பூரா பகுதியைச் சேர்ந்தவர் பகவதி பிரசாத்துஷ். தனது உறவினர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர், சுய்ப்ரேன் வீதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப் பையை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் பறித்துச் சென்றது.
     இதனால் அதிர்ச்சியடைந்த பகவதி பிரசாத்துஷ் அலறினார். அவரது சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்தக் கும்பல் தலைமறைவானது.
     கைப் பையில் முக்கிய ஆவணங்கள், ஒடிசாவுக்கு திரும்பிச் செல்வதற்கான பயணச் சீட்டு, பணம் உள்ளிட்டவை இருந்தன.
     இது குறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai