Enable Javscript for better performance
கடலில் காணாமல் போன மாணவர் சடலமாக மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் கடலில் குளிக்கும் போது காணாமல் போன மாணவர்களில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
     திருபுவனை சின்னபேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ரவிச்சந்திரன் (16). திருபுவனை அரசுப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு பயின்று வந்தார். சென்னையில் இருந்து வந்திருந்த உறவினர் வசந்தகுமார்(16) என்பவருடன் திங்கள்கிழமை புதுவை தலைமைச் செயலகம்அருகே உள்ள கடலில் குளித்தார். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய இருவரும் மாயமாகினர். அங்கிருந்தோர் இருவரையும் தேடினர்.
     இதுகுறித்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரியக்கடை போலீஸார் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 2 நாள்களாக மாயமான இளைஞர்களை தேடும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வசந்தகுமாரின் உடல் வைத்திக்குப்பம் பாலம் அருகே புதன்கிழமை கரை ஒதுங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சோலை நகர் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிச்சந்திரனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai