Enable Javscript for better performance
கால்நடை வளர்ப்போர் குழு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை வேளாண்மைத் துறை சார்பில் நல்லவாடு கிராமத்தில் கால்நடை வளர்ப்போர் குழுவை கூடுதல் வேளாண் இயக்குநர் ரவிப்பிரகாசம் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
     புதுவை அரசின் வேளாண் துறை சார்பில் கிராமப்புறங்களில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆத்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நல்லவாடு கிராமத்தில் கால்நடை வளர்ப்போரை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
     இதனை கூடுதல் வேளாண் இயக்குநர் ரவிப்பிரகாசம் தொடக்கி வைத்தார். மேலும் அரசின் சுழல் நிதியாக ரூ. 10,000 வழங்கப்பட்டது. வங்கிகள் மூலம் கடன் பெற்று கால்நடைகளை பராமரித்து பால் உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
     துணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன், கால்நடை துறை இணை இயக்குநர் குமாரவேல், ஆத்மா திட்ட மேலாளர் செல்வமுத்து மற்றும் உழவர் உதவியக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai