காவல் துறை உதய தின கால்பந்துப் போட்டி
By புதுச்சேரி, | Published on : 05th October 2017 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுச்சேரியில் காவல்துறை உதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.
காவல்துறை உதய தின விழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு, காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காவல் துறையினர் ஒரு அணியாகவும், செய்தியாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் இணைந்து ஒரு அணியாகவும் மோதினர்.
காவல்துறை பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செய்தியாளர்கள் அணியை வீழ்த்தி காவல்துறை அணி வெற்றி பெற்றது.
காவல்துறை அணியில் டி.ஜி.பி., சுனில்குமார் கௌதம், முதுநிலை எஸ்.பி.க்கள் ராஜீவ் ரஞ்சன், சந்திரன், எஸ்.பி.க்கள் ரச்சனா சிங், பாலகிருஷ்ணன், கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசுக் கோப்பையும், பரிசுகளும் வழங்கினார். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி. ஆறுமுகம், எஸ்எஸ்பி அபூர்வா குப்தா உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியிலும் காவல்துறை அணி வெற்றி பெற்றது.