Enable Javscript for better performance
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

    By    புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் பாமகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டி பாகூர் காவல் நிலையத்தை அந்தக் கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
     சேலியமேடு கிராமத்தில் அரசுப் பள்ளியில் இருந்த அம்பேத்கர் படத்தை சிலர் சேதப்படுத்தினார்கள்.
     இதனால், சேலியமேடு மற்றும் அரங்கனூர் கிராமத்தாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் துப்பாக்கி சூடு, தடியடி நிகழ்த்தி நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
     இந்தப் பிரச்னையில் 226 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     ஆனால், போலீஸார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி பாமகவினர் பாகூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
     பாமக அமைப்பாளர் தனராஜ் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
     இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai