சுடச்சுட

  

  டெங்கு கொசுவை ஒழிக்கும் பணியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
   புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் இணைந்து செயல்படுகின்றன.கிராமப்புறங்களில் டெங்கு கொசுவை ஒழிக்கும் திட்டத்தை கொம்யூன் பஞ்சாயத்துகள் தொடங்கியுள்ளது.
   திருபுவனை கிராமத்தில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தீவிர கொசு ஒழிப்புப் பணி தொடங்கியது.கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் பணிகளை புதன்கிழமை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
   கழிவு நீரை அகற்றியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும், பழைய பொருள்களை ஒழித்து கொசு மருந்து தெளிப்பு பணிகளை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்தப் பணி விரைவாக கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai