சுடச்சுட

    

    சர்க்கரை ஆலைகளை இயக்க வலியுறுத்தி 11-இல் ஆர்ப்பாட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்க்கரை ஆலைகளை இயக்க வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என புதுவை மாநில விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
     அந்தச் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் வில்லியனூர் விவசாயிகள் சங்க தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கெüரவத் தலைவர் மாசிலாமணி தலைமை வகித்தார்.
     தில்லி தர்னா போராட்டம் குறித்து பொதுச் செயலாளர் கீதநாதன் பேசினார். கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ராஜா, பொருளாளர் கலியமூர்த்தி, துணைத் தலைவர் பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், இருசப்பன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூடப்பட்டுள்ள அரியூர் இஐடி பாரி சர்க்கரை ஆலை மற்றும் லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடத்த புதுச்சேரி அரசை வலியுறுத்தும் வகையில் வரும் 11-ஆம் தேதி சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் தர்னா போராட்டத்தில் புதுச்சேரியில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்வது, பால் கொள்முதல் விலையை ரூ. 45 ஆக அரசு உயர்த்த வேண்டும், டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai