சுடச்சுட

  

  ஜிப்மரில் செயற்கை கருத்தரிப்பு உதவி மையம் தொடக்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஜிப்மரில் செயற்கை கருத்தரிப்பு உதவி மையத்தை மருத்துவமனை இயக்குநர் எஸ்.சி. பரிஜா புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
   இந்த செயற்கை கருத்தரிப்பு உதவி மைய தொடக்க விழாவில் துணை இயக்குநர் நிர்வாக பிரிவு தலைவர் டி.கே. பதேத்ரா, மகப்பேறு மற்றும் மாதர் நோய் பிரிவுத் தலைவி தாசரி பாப்பாஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர் நோய் துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வகம் ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த மையம் பொதுமக்கள் உபயோகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்கப்படும்.
   இந்த சேவை மூலம் பல்வேறு வகையான மலட்டுத் தன்மை சிகிச்சை முறைகள் வழங்கப்பட உள்ளன. பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 முதல் 2 லட்சம் வரை செலவாகும்.
   இங்கு ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த செலவிலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் சேவை வழங்கப்படும்.
   மேலும், புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளான இளம் வயதினரின் விந்து மற்றும் கருமுட்டை புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னரே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அவை புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைப் பேறு தேவைப்படும் சமயத்தில் உபயோகிக்கப்படும். இன்னும் இரண்டு மாதங்களில் தேவையான நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இனப்பெருக்க மருத்துவம் என்ற தனிப் பிரிவு ஜிப்மரில் இயங்கும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai