சுடச்சுட

  

  புதுவை நலவழித் துறை, தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் டெங்கு குறித்து வாகனம் த்துடன் மூலம் விழிப்புணர்வு சாலையோர நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.
   இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார் விழிப்புணர்வு நாடகத்தை தொடக்கி வைத்தார். மலேரியா தடுப்பு திட்ட அதிகாரி சுந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் ரகுநாதன், மருத்துவர் குமாரவேல், பூச்சியியல் வல்லுநர் குணசேகரன், தொழில்நுட்ப உதவியாளர்கள் செந்தில்வேலன், ஸ்ரீதர் மற்றும் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
   இந்த விழிப்புணர்வு பிரசாரம் 2 வாரங்கள் நடக்கிறது. புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai