சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு: ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு வைக்க அறிவுறுத்தல்

  By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு பாதிப்பு எதிரொலியாக புதுவையில் உள்ள ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் பெற்று இருப்பு வைக்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குயவர்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
   பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கந்தசாமி, ஆலோசகர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   நிர்வாகிகள் ராஜா, எத்திராஜ், செல்வம், புருஷோத்தமன், கண்ணன், ஆறுமுகம், காமராஜ், அய்யாகண்ணு, குணபூஷ்னம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மகளிர் அணிச் செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
   தீர்மானங்கள்: புதுவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்ற புதுச்சேரியை மருத்துவ அவசர காலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
   எந்தெந்தப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவை ஒழிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai