Enable Javscript for better performance
நகராட்சி ஊழியர் வாரிசுதாரர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சி ஊழியர் வாரிசுதாரர்கள் போராட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் நகராட்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
     புதுச்சேரி நகராட்சியில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 137 பேர் கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதுகுறித்து முதல்வர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர், புதுச்சேரி நகராட்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு எனும் அமைப்பை தொடங்கி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
     இந்த நிலையில், கூட்டமைப்பினர் கம்பன் கலையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் லூர்துநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சத்யன். பொருளாளர் பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். அவர்களிடம் நகராட்சி ஆணையர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
     விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai