சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கல்வியை மத்திய, மாநில அரசுகள் கடைச்சரக்காக்கி விட்டன, அதைக் கண்டித்தும், புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பெரும் மோசடி நடந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறிய கல்லூரிகள் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும், ஆளுநர் இந்த விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணமாக பேசி வருகிறார். சென்டாக் முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் வி.பெருமாள் தொடக்க உரையாற்றினார். டி.முருகன் நிறைவுரை ஆற்றினார்.
   செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், எஸ்.ராமச்சந்திரன், பிரதேசக் குழு உறுப்பினர்கள் கலிவரதன், ஆனந்து, சரவணன், சத்யா, நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai