சுடச்சுட

    

    விண்வெளி வார விழாவில் பங்கேற்க புதுவை மாணவர்கள் சென்னை பயணம்

    By  புதுச்சேரி,  |   Published on : 05th October 2017 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள உலக விண்வெளி வார விழாவில் பங்கேற்க புதுவை மாணவர்கள் சென்னை செல்கின்றனர்.
     இதுதொடர்பாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் துவாரகநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் முதல் முறையாக சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (அக். 5) மற்றும் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற உள்ள உலக விண்வெளி வார விழாவில், புதுச்சேரி அரசுப் பள்ளியைச் சார்ந்த 15 மாணவர்களை, பல்கலைக்கழகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தும் வினாடி-வினா, ஓவிய போட்டி மற்றும் பேச்சுப் போட்டி ஆகியவைகளில் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளது.
     இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு வினாடி-வினா போட்டி, விண்வெளி பயணம், விண்வெளி காணொலிக் காட்சிகள், இஸ்ரோ ஏவிய விண்வெளி ஓடங்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடலும் நடைபெற உள்ளது. செயற்கை கோள்களின் மாதிரிகள் இந்திகழ்ச்சியில் வைக்கப்படவுள்ளது. இதில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கான அனைத்துச் செலவுகளையும், புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai