சுடச்சுட

  

  காலி மனைகளில் தண்ணீர் தேங்கினால் தெரிவிக்கலாம்: உழவர்கரை நகராட்சி ஆணையர்

  By  புதுச்சேரி  |   Published on : 06th October 2017 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காலி மனைகளில் தண்ணீர் தேங்கினால் தெரிவிக்கலாம் என உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
   புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க உழவர்கரை நகராட்சி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
   குறிப்பாக, காலி மனைகளில் தேங்கும் நீரை மோட்டார் வைத்து இரைத்தல், கட்டடக் கழிவுகளைக் கொண்டு காலி மனைகளை நிரப்புதல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் டெங்குவை ஒழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
   பள்ளமான பகுதியில் வீடு கட்டுபவர்கள், கட்டியுள்ளவர்கள் தங்களது வீடுகளை மேடாக்க மேட்டுபாளையம் கனரக ஊர்தி மையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கட்டட மற்றும் இடிபாடு கழிவுகளை நகராட்சியின் அனுமதி பெற்று இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
   உழவர்கரை நகராட்சியின் 37 வார்டுகளில், வார்டு ஒன்றுக்கு ஒரு தெளிப்பான் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
   டெங்கு ஒழிப்பு பணிப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறையின் வாயிலாக கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுபிடித்து அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனையோடும், பொதுமக்கள் ஒத்துழைப்போடும் கொசு மருந்து அடிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
   எனவே, பொதுமக்கள் தங்களது பகுதியில் தண்ணீர் தேங்காமல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai