சுடச்சுட

  

  ஜிப்மரில் முதல் முறையாக நோயாளிக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல்முறையாக நோயாளிக்கு அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது.
   டிரான்ஸ் கத்தீடர் அயோர்டிக் வால்வு ரீப்ளேஸ்மெண்ட் எனப்படும் இந்தச் சிகிச்சை முறையில், தொடையில் ஒரு சிறிய குழாயின் வழியாக வால்வு இருதயத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு, பழுதடைந்த வால்வு இருந்த பகுதியில் பொருத்தப்படும்.
   இந்தச் சிகிச்சை புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த இரு நோயாளிகளுக்கு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் அயோர்டிக் வால்வு அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டனர்.
   நோயாளிகள் இருவரும் முதியவர்கள் என்பதாலும், அறுவைச் சிகிச்சையால் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இந்த வால்வு மாற்று சிகிச்சை அறுவைச் சிகிச்சையின்றி மேற்கொள்ளப்பட்டது.
   ஜிப்மர் இயக்குநர் எஸ்சி. பரிஜா, மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெ. பாலசந்தர் மேற்பார்வையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
   மருத்துவர்கள் அஜித் அனந்தகிருஷ்ணப் பிள்ளை, சந்தோஷ் சதீஷ், ராஜா ஜெ.செல்வராஜ், ஸ்ரீவத்சா கே.எஸ். பிரசாத், சத்யன் பரிடா உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai