சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பை சமாளிக்க ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் நமச்சிவாயம்

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் டெங்கு பாதிப்பை சமாளிக்க ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
   புதுச்சேரியில் டெங்கு கட்டுப்படுத்துவது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை அலுலகத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ண ராவ், ஷாஜகான் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வல்லவன், உள்ளாட்சித் துறைச் செயலர் ஜவகர், இயக்குநர் முகமது மன்சூர், நகராட்சி ஆணையர்கள் கணேசன், ரமேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   டெங்குவைக் கட்டுப்படுத்துதல், ஒழித்தல் தொடர்பான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
   கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பாதிப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துறை அதிகாரிகளுக்கு அதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னையில் தேவையான நிதி வழங்க அரசு தயாராக உள்ளது. இதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் நமச்சிவாயம்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai