சுடச்சுட

  

  நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அதன் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலக வளாகத்தில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
   நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் மாதச் சம்பளம், இதர சலுகைகளுக்கு புதுச்சேரி அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, புதுச்சேரி அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கூட்டமைப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
   பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாத நிலையில், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
   அதன் ஒரு பகுதியாக கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
   அதேபோல கூட்டு நடவடிக்கை போராட்டக் குழுவினர் தலைமைத் தபால் நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு பிரிவினரும் 88-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai