சுடச்சுட

  

  புதுவை பல்கலை.க்கு யுஜிசி ரூ.37 கோடி ஒதுக்கீடு

  By  புதுச்சேரி,  |   Published on : 06th October 2017 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) சார்பில், ரூ. 37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக புதுவை பல்கலை. செய்தி - மக்கள் தொடர்புத் துறை உதவிப் பதிவாளர் மகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   பல்கலை. மானியக் குழுவானது இந்தியாவில் இயங்கி வரும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தைக் கண்டறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆய்வுக் குழுவை நியமித்தது.
   இந்தக் குழுவில் தலை சிறந்த பேராசிரியர்களும், அரசின் உயர் அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். குழுவினர் புதுவை பல்கலை.யையும் ஆய்வு செய்து அறிக்கையை பல்கலை. மானியக் குழுவிடம் அளித்தனர்.
   இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற பல்கலை. மானியக் குழுவின் 525- ஆவது கூட்டத்தில் ஆய்வுக் குழுவினரின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் குழுவினர் புதுவை பல்கலை.யில் நடத்திய கள ஆய்வு மற்றும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு பல்கலை. மானியக் குழு 2017 -18 ஆம் நிதியாண்டுக்கான மூலதன சொத்து நிதி ஒதுக்கீடாக ரூ. 37 கோடியை அறிவித்துள்ளது.
   தொடர்ந்து, முதல் தவணையாக ரூ. 17 கோடியை பல்கலை. மேம்பாட்டுப் பணிகளுக்காக வழங்கியுள்ளது. பௌதீக துறைக்கென சிறப்புஆய்வுக் கூட வசதிகளை உருவாக்குதல், புதிய கருத்தரங்க அறைகளை உருவாக்குதல், காரைக்காலில் இயங்கிக் கொண்டிருக்கும் புதுவை பல்கலை. துறைகளில் படிக்கும் மாணவிகளுக்கான புதிய தங்கும் விடுதிகளை உருவாக்குதல், வேதியியல் துறைக்கான புதிய இணைப்புக் கட்டடம் கட்டுதல், உயிர் நுண்ணுயிரியல் துறைக்கான கூடுதல் பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் மானியக் குழு ரூ. 12 கோடியை ஒதுக்கியுள்ளது.
   மேலும், புதுவை பல்கலை. மேம்பாட்டுப் பணிகள், உலகத் தரத்திலான நூல்களைக் கொள்முதல் செய்தல், ஆய்வுக் கூடங்களுக்கான புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ. 5 கோடியை ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai