சுடச்சுட

  

  அமைச்சர் என்னைச் சந்தித்தால் சுவாரஸ்யமான ஆவணங்களை காட்டுவேன்: துணை நிலை ஆளுநர் கடிதம்

  By  புதுச்சேரி  |   Published on : 07th October 2017 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அமைச்சர் எம்.கந்தசாமி செல்வதற்கு முன்பு தன்னைச் சந்தித்தால் சுவாரஸ்யமான ஆவணங்களை காட்டுவதாக புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
   புதுச்சேரி மக்கள் நலத் துறை அமைச்சர் எம்.கந்தசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
   இந்த நிலையில், தனது துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவிடாமல் துணை நிலை ஆளுநர் தாமதப்படுத்துவதாக அமைச்சர் குற்றம்சாட்டியதோடு, ஆளுநரைக் கண்டித்து தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார்.
   இதையடுத்து அமைச்சர் கந்தசாமிக்கு வியாழக்கிழமை கிரண்பேடி கடிதம் எழுதிய நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நீங்கள் தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தச் செல்வதற்கு முன்பு ராஜ்நிவாசுக்கு வந்தால் வரவேற்கிறேன். எந்தத் தேதியிலும், எந்த நேரத்திலும் வந்து விவாதிக்கலாம். அப்போது மிக முக்கியமான, சுவராஸ்யமான ஆவணங்களை காட்டுவேன். அந்த ஆதாரங்களை மத்திய ஊழல் தடுப்புக் கமிட்டி, சிபிஐ-க்கு அனுப்புவதற்கு முன்பாக உங்களுக்கு காட்டுவதற்கு ஆசைப்படுகிறேன்.
   ஏற்கெனவே தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வேறு திட்டங்களுக்கு செலவிட்டதை கூறியுள்ளேன்.
   அமைச்சர் அதைப் பார்த்திருந்தால் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும். ஏனென்றால் அவர் யாருக்காகப் பேசுகிறாரோ, அவர்கள் தொடர்பான விஷயம் இது. ஆனால் எடுக்கப்பட்ட முடிவுகளோ மாறுபட்டதாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக சரியான முறையில் எடுக்காத முடிவுகளை சரிசெய்து கொள்ளலாம்.
   இவ்வாறு கிரண்பேடி அதில் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai