Enable Javscript for better performance
அறிவியல் பயிலரங்கில் பங்கேற்க மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் பயிலரங்கில் பங்கேற்க மாணவர்கள் முன்பதிவு செய்யலாம்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் நடைபெறும் அறிவியல் பயிலரங்கில் பங்கேற்க மாணவர்கள், பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
     இதுகுறித்து புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மா.துவாரகாநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் ஆகியவை இணைந்து பொதுக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கை மாதம் இருமுறை வார இறுதி நாள்களில் நடத்த உள்ளன. அதன்படி, வருகிற 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் பயிலரங்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சண்முகம் பங்கேற்று கேளிக்கை அறிவியல் (வேதியியல்) என்ற தலைப்பில் விரிவுரை வழங்க உள்ளார். இதில் பொதுமக்கள், மாணவர்கள் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். எனவே, ஆர்வமுடையோர் நேரடியாக அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏதேனும் ஒரு அடையாள சான்று நகலுடன் (பள்ளி அடையாளச் சான்று, பணியின் அடையாளச் சான்று) முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். பதிவு செய்தவர்கள் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை அன்றைய தினத்தில் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2256111, 2257222 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai