சுடச்சுட

  

  புதுச்சேரி வேல்ராம்பட்டில் உள்ள சாரதா கங்காதரன் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம், சிகப்பு ரிப்பன் கழகம், ரோட்ராக்ட் சங்கம் ஆகியவை சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.
   முகாமில் கல்லூரி மாணவ-மாணவிகள் ரத்த தானம் செய்தனர். கல்லூரி முதல்வர் ஜெ.சுகுமார், இயக்குநர் எஸ்.சீனிவாசன், புதுச்சேரி மாநில இந்திய செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சிவராமச்சந்திரன், பாண்டிச்சேரி ஆரோசிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ப.குப்புசாமி, ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் சீனு.தண்டபாணி ஆகியோர் செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai