சுடச்சுட

    

    டெங்குவைக் கட்டுப்படுத்த தவாக வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மாநிலத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியது.
     இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இருந்தபோதும் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது.
     குறிப்பாக கடந்த மாதம் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 217 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 110 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அதிக பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
     அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 40 மருத்துவர்கள், 80 செவிலியர்களே உள்ளனர். இவர்கள் 3 பணி சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருவதால் அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளை சரிவர கவனிக்க முடியவில்லை. மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதனால் அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து, அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai