சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பு: புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு

  By  புதுச்சேரி  |   Published on : 07th October 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் டெங்கு பாதிப்பை அடுத்து, அரசு தலைமை மருத்துவமனையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
   புதுச்சேரி அரசு தலைமை மருத்துவமனை, கதிர்காமம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.
   இந்த நிலையில், புதுச்சேரி அரசு தலைமை பொது மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளனவா, மருந்துகள் இருப்பில் உள்ளனவா என்பதை அறியும் வகையில் புதுச்சேரி சட்டப் பேரவை மதிப்பீட்டு மற்றும் பொதுக் குழுவில் இடம் பெற்றுள்ள எம்எல்ஏக்கள் ஏ.அன்பழகன், ஆர்.சிவா, பாலன், ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
   அப்போது, டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருவதால், அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளிடம் மதிப்பீட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
   ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திமுக எம்எல்ஏ ஆர்.சிவா கூறியதாவது: டெங்கு பாதிப்பு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   டெங்கு சிறப்பு வார்டில் நோயாளிகள் போதிய அளவில் படுக்கை வசதியின்றி அவதிப்படுவது தெரியவந்துள்ளது. ஒரு சில இடங்களில் மருத்துவக் குழுவினரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai