Enable Javscript for better performance
நிலுவைத் தொகை கோரி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    நிலுவைத் தொகை கோரி கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தர்னா

    By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலுவைத் தொகையை வழங்கக் கோரி நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் புதுவையில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
     புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கப்பட்டு, புதுவை அரசு அதனை அமல்படுத்தியபோதிலும், கடந்த 6 மாதங்களாக நிலுவைத்தொகை வழங்கப்படவில்லையாம். மேலும், அகவிலைப்படி நிலுவைத் தொகை, உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியும் வழங்கப்படவில்லையாம். இவற்றை அரசு காலத்தோடு வழங்கக் கோரி புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் சங்கம், புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஓட்டுநர்கள் சங்கம், பண்டக காப்பாளர் சங்கம், பதிவேடு காப்பாளர் சங்கம், பல்நோக்கு ஊழியர்கள் சங்கம், தினக்கூலி பகுதி நேர ஊழியர்கள் சங்கம், டெலிபோன் ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதுவரை நிலுவைத் தொகை வழங்குவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
     இதையடுத்து வெள்ளிக்கிழமை தலைமை தபால் நிலையம் அருகே கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தர்னாவில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சக ஊழியர் சங்கம் ரங்கதுரை, பண்டக காப்பாளர் சங்கம் விசுவநாதன், பதிவேடுகள் காப்பாளர் ஊழியர் சங்கம் கணேசன், டெலிபோன் ஆபரேட்டர் சங்கம் லூர்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai