சுடச்சுட

  

  புதுச்சேரியில் இன்று அறிவியல் கண்காட்சி தொடக்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் உலக விண்வெளி வார அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
   இதுகுறித்து பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ்
  புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சதீஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ, பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் உலக விண்வெளி வார நிகழ்ச்சி மற்றும் பெத்திசெமினார் பள்ளியின் அறிவியல் கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (அக்.7) தொடங்கி திங்கள்கிழமை (அக்.9) வரை நடைபெறுகிறது.
   உப்பளம் பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடைபெறும். இதையொட்டி, சனிக்கிழமை காலையில் நடைபெறும் ஸ்பேஸ் வாக் ரேலியை பள்ளித் தாளாளர் அந்தோனி ஆனந்தராயர் தொடக்கி வைக்கிறார். அறிவியல் கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இளையோர் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெறும் நிறைவு நாள் விழாவில் முதல்வர் வி.நாராயணசாமி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார். போட்டியில் வெற்றி பெறும் மாணவர், ஸ்ரீஹரிகோட்டாவில் அடுத்த முறை நடைபெறும் ராக்கெட் ஏவுதள நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai