சுடச்சுட

  

  போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்கு

  By  புதுச்சேரி,  |   Published on : 07th October 2017 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போஸ்கோ சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
   புதுச்சேரி கதிர்காமத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் வெளியூரைச் சேர்ந்த அன்பு என்ற இளைஞர் குடியேறியுள்ளார். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாராம். இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார்.
   இதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அன்பு மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
   எனினும் அன்பு எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai