Enable Javscript for better performance
விடுதியில் தகராறு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விடுதியில் தகராறில் ஈடுபட்டு வரவேற்பாளரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
     விழுப்புரம் மாவட்டம், வரிக்காலைச் சேர்ந்த சீனுவாசன் மகன் ஏழுமலை (23). புதுவை ஏனாம் வெங்கடாசலபிள்ளை வீதியில் உள்ள விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார். மாலை நேரங்களில் விடுதி வரவேற்பாளராகவும் பணிபுரிவாராம். வியாழக்கிழமை இரவில் விடுதிக்கு வந்த 3 பேர் அறை கேட்டுள்ளனர். அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தூய்மைப்படுத்தப்படாமல் ஒரு அறை இருப்பதாகவும், ஆனால் அதை தூய்மைப்படுத்த ஊழியர்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் சேர்ந்து
     விடுதியிலிருந்த பொருள்களை எடுத்து ஏழுமலை மீது வீசினராம். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
     இதுகுறித்து ஏழுமலை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விடுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கோவிந்தசாலையை சேர்ந்த ரௌடிகள் மோகனின் மகன் சதீஷ் (29), நீலகண்டன் (எ) பப்பு (32), ஆறுமுகத்தின் மகன் ஜெய் (எ) ஜெய்குமார் (29) என்பது தெரியவந்தது.
     இதனையடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai